வாட்ஸ் ஆப்பில் அதிரடி வசதி: வீடியோ சட்டில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது உலக அளவில் இணையம் ஊடாக குரல்வழி அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு என்பவற்றினை மேற்கொள்வதற்கு வாட்ஸ் ஆப் எனப்படும் மொபைல் அப்பிளிக்கேஷன் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

அண்மையில் வீடியோ சட்டில் ஒரே நேரத்தில் இணையக்கூடிய பயனர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

உலக அளவில் நடைமுறைக்கு வந்த லாக்டவுன் நிலைமையை தொடர்ந்து இவ் வசதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருந்தது.

எனினும் வெவ்வேறு வீடியோ சட் அப்பிளிக்கேஷன்களில் இதைவிடவும் அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் வீடியோ சட்டில் இணையக்கூடிய வசதி காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் ஆனது வீடியோ சட்டில் ஒரே நேரத்தில் இணையக்கூடியடிவர்களின் எண்ணிக்கைய 50 ஆக உயர்த்தியுள்ளது.

எனினும் WhatsApp Web ஊடாகவே இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பேஸ்புக் நிறுவனத்தின் Facebook Room மூலம் வாட்ஸ் ஆப் வெப்பில் இவ் வசதி வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்