பிறந்து சில மணிநேரங்களில் கொலை செய்யப்பட்ட சிசு!

Report Print Fathima Fathima in ஆசியா

சீனாவில் பிறந்து இரண்டு மணிநேரங்களேயான பச்சிளம் குழந்தையை தாய் ஒருவர் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Wangjiaoqiao என்ற கிராமத்தில் பிங்க் நிற பிளாஸ்டிக் கவரில் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது.

பிறந்து சில மணிநேரங்களே ஆன நிலையில் அதனை பார்த்தவர்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், இருப்பினும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

இதனையடுத்து பொலிசார் விசாரணை நடத்தியதில் பெண் ஒருவர், குறித்த பிளாஸ்டிக் கவரை கொண்டு சென்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த குழந்தையின் தந்தை யார் என தனக்கு தெரியாது எனவும், வருமானம் ஏதும் இல்லாததால் குழந்தையை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குழந்தை இறந்து பிறந்ததா அல்லது குழந்தையை உயிருடன் தூக்கி எறிந்தாரா என தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image: CEN

Image: CEN

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments