மிதுன ராசிக்கு செல்லும் சூரியன்! எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

ஆண்டின் ஆரம்பத்தில், சூரியன் மேஷ ராசிக்கு ஏப்ரல் 13, 2020 அன்று இடம் பெயர்ந்தார். அதன் பின் ரிஷப ராசிக்கு மே 14 அன்று நகர்ந்தார். இப்போது சூரியன் மிதுன ராசிக்கு ஜூன் 14 ஆம் இடம் பெயர்ந்துள்ளார்.

இது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரியன் இடம் பெயருவார்.

இதன்போது சூரியன் ஒரு ராசியின் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

இதனடிப்படையில் இந்த மாதம் ஜூன் மாத சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷத்தைப் பொறுத்தவரை, சூரியன் உங்கள் 5 ஆவது வீட்டு அதிபதி மற்றும் இந்த பெயர்ச்சியால் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.

இந்த வீடு தைரியம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. இந்த பெயர்ச்சியால் நன்மை காணும் சில தொழில் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மேலும் வாழ்வில் காணவிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வெற்றி பெறுவீர்கள். மேலும் நிதி முன்னேற்றத்திற்கும் புதிய பணியை தொடங்குவதற்கும் சிறந்த காலம். சகோதர சசோதரிகளுடன் உறவு நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் 4 ஆவது வீட்டின் அதிபதி மற்றும் இந்த பெயர்ச்சியால் 2 ஆவது வீட்டில் இருப்பார்.

இந்த சூரிய பெயர்ச்சியின் போது யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது மற்றும் பொய்யான வாக்குறுதியை யாருக்கும் கொடுக்காதீர்கள். இல்லையென்றால் இழப்பை சந்திப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தேவையில்லாமல் கோபப்படக்கூடும். இதற்கு காரணம் உங்களின் ஆளுமை வீட்டில் இருப்பது தான்.

இதனால் கோபமும், முரட்டுத்தனமும் அதிகமாக காணப்படும். அதோடு லட்சியத்தை அடைய மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மேலும் தொழில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் திட்டமிடாமல் மற்றும் சிந்திக்காமல் செயல்படாதீர்கள். உங்களின் பதற்றமான மனநிலையால் குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் வரக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக கண் சம்பந்தமான பிரச்சனை, தலை வலி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படாவிட்டால், இழப்பை சந்திக்கக்கூடும்.

உணர்ச்சிபூர்வமாக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். யாருடனும் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தவறான புரிதலால் உறவுகளில் பிரச்சனை ஏற்படும்.

சிம்மம்

சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் லட்சியங்கள் நிறைவேறும். எதிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.

அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்கள் துணையைப் பெறுவார்கள். இந்த சூரிய பெயர்ச்சியால் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல முடிவுகளைத் தரும்.

உங்களின் திறன் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஈகோவை கைவிட்டால், இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் இனிமையானதாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் வரவிருக்கும் வாய்ப்புக்கள் மற்றும் அதிர்ஷ்டம் பாதிக்கப்படலாம்.

ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உடன் பிறப்புக்கள் மற்றும் நண்பர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கக்கூடும். ஏனெனில் சூரியன் சாதகமற்ற நிலையில் மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியால் மனக்கவலைகள் அதிகரிக்கும். குறிப்பாக வருமானம் குறித்து கவலைப்படுவீர்கள்.

இதனால் உடல் நலம் மற்றும் உணவுப் பழக்கம் பாதிக்கப்படும். வயிறு மற்றும் கண் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

தனுசு

தனுசு ராசியின் ஏழாவது வீட்டில் சூரியன் செல்லும் போது, சுவாரஸ்யமான முடிவுகளைப் பெறுவீர்கள். கடினமான முடிவுகளையும் எளிதாக எடுப்பீர்கள்.

இதனால் திருமண வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிளவு ஏற்படலாம். தலைமைத்துவ திறன் அதிகரிக்கும்.

பயணம் மேற்கொள்ள திட்டம் தீட்டியிருந்தால், அதை தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மகரம்

மகர ராசியின் ஏழாவது வீட்டில் சூரியன் செல்கிறார். இதனால் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். நீண்ட காலமாக அவஸ்தைப்பட்டு வந்த நோய்களை வெல்வீர்கள்.

தொழில் வாழ்க்கை பாராட்டப்படும். மூத்த அதிகாரிகள் வேலையைப் பாராட்டுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் ஏழாவது வீட்டின் அதிபதியாகும். இந்த சூரிய பெயர்ச்சியால் உங்களின் கடுமையான மற்றும் பிடிவாதமான அணுகுமுறை உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

குழந்தைகள் எரிச்சலுடனும், கோபத்துடனும் இருப்பார்கள். இதனால் பெற்றோர்கள் சிரமங்களை சந்திப்பார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சூரியன் பலவீனமான நான்காவது வீட்டில் செல்கிறார். இதனால் தாயின் உடல்நிலை குறித்து கவலைப்படலாம்.

ஆண்டின் இந்த நேரத்தில் சூரியன் ஒரு வலுவான நிலையில் இல்லை என்பதால், இது ஒரு முடிவை எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

இதனால் இழப்பு மற்றும் மன அழுத்தம் கூட ஏற்படலாம். மேலும் தொழில் மற்றும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் சிறந்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்