கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களைப் போக்க வேண்டுமா?

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு வேலைப்பளுவின் காரணமாக இரவில் நீண்ட நேரம் வேலை முடித்துவிட்டு, தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுவதால், சரியான அளவு ஓய்வு கண்களுக்குக் கிடைக்காமல், கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து அழகைக் கெடுக்கிறது.

இதற்கு நாம் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி தான் பூச வேண்டும் என அவசியமில்லை. இதற்கு வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.

அந்தவகையில் பேக்கிங் சோடா கருவளைத்தினை போக்க பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது இதனை வைத்து கருவளையத்தை எப்படி போக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
  • சீமைச்சாமந்தி டீ - சிறிது
தேவையானவை

பேக்கிங் சோடாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். பின் மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.

இந்த முறை கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதோடு, கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளைப் போக்கி, கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.

இந்த செயலை தினமும் செய்ய வேண்டாம். வாரத்திற்கு 3 முறை இரவில் படுக்கும் முன் செய்யுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...