த்ரெட்டிங் செய்த பின் அந்த இடத்தில் பரு வருகிறதா?

Report Print Kavitha in அழகு
177Shares

இன்றைய காலத்தில எல்லா பெண்களும் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு த்ரெட்டிங்,வேசிங், முடி நீக்கும் கருவிகள் மூலம் அகற்றுவண்டு.

ஆனால் இதில் பல பெண்கள் த்ரெட்டிங்கை தான் தேர்வு செய்கின்றார்கள். ஏனெனில் வேக்சிங்கை விட த்ரெட்டிங் செய்வதால் வலி சற்று குறைவாக இருக்கும்.

இருப்பினும் சிலருக்கு புருவங்களில், உதட்டிற்கு மேல் மற்றும் நெற்றியிலும் த்ரெட்டிங் செய்த பின் அவ்விடத்தில் பரு வரும்.

பிம்பிள் வருவதற்கு முக்கிய காரணம், சுத்தமில்லாமை மற்றும் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் இருப்பது தான்.

அந்தவகையில் இதுபோன்று பரு வரமால் தடுக்க ஒரு சில வழிமுறைகள் உள்ளது. அதனை கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். தற்போது அந்த வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

Google
  • த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும்.
  • முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும்.
  • பின் இயற்கையான டோனரைக் கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும். அதிலும் சீமைச் சாமந்தி டீ அல்லது கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள். அதன் பின் த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள்.
  • த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகள் அமையாகி, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
  • முகம் கழுவ வேண்டும் என்று தோன்றினால், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பரு வருவது தடுக்கப்படும்.
குறிப்பு
  • த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது. அதேப்போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது.
  • அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்