கனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு: வெளியாகும் ஆதாரங்கள்!!

Report Print Dias Dias in கனடா
128Shares
128Shares
lankasrimarket.com

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு மாபெரும் மாநாடு நேற்று ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வருகைதந்திருந்தனர்.

குறித்த மாநாட்டின் தொடர்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதில், கார்ல்சன் பல்கலைக்கழக பீடாதிபதி போன்றோர் சிறப்பு உரையாற்றவுள்ளனர்.


இதேவேளை, நேற்றைய தினம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, இனப்படுகொலை , சித்திரவதை, மனித உரிமை மீறல்கள் போன்ற பல தலைப்புகளில் பிரான்சிஸ் எலிசன், பீற்றர் சல்க், பிரான்சிஸ் போயில் போன்ற பல அறிஞர்கள் பல ஆதாரங்களுடன் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய மாநாட்டிலும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு உரையாற்றுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்