கனடாவில் சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென மரணமடைந்துள்ளார்.

இத்தகவலை கனேடிய மத்திய அரசாங்க ஏஜன்சியான Correctional Service Canada வெளியிட்டுள்ளது.

அதன்படி மணிடோபாவில் உள்ள Stony Mountain Institution சிறையில் 26 வயதான கைதி அடைக்கப்பட்டிருந்தார்.

கொள்ளை மற்றும் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் குறித்த சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

ஐந்து ஆண்டுகள் நான்கு மாதம் தண்டனையுடன் சிறையில் இருந்த கைதி திடீரென மரணமடைந்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers