டொராண்டோ இளம்பெண்கள் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Balamanuvelan in கனடா

டொராண்டோவில் கொலை செய்யப்பட்ட இரண்டு இளம்பெண்கள் வழக்கில் முக்கிய ஆதாரம் சிக்கியதையடுத்து 46 வயது நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டொராண்டோவில் Rori Hache மற்றும் Kandis Fitzpatrick என்னும் இரு இளம்பெண்கள் காணாமல் போன நிலையில் ஒண்டாரியோ ஏரியில் முண்டமாக ஒரு உடல் கிடைத்தது.

தடயவியல் ஆய்வில் அது Rori Hacheஇன் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் Adam Strong (46) என்னும் ஒருவரின் வீட்டில் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

DNA சோதனை மேற்கொண்டபோது அவை Roriயின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டதோடு, அதே வீட்டில் Kandisஇன் DNAவும் கிடைத்தது.

முன்பு Adam Strongமீது ஒரு இறந்த உடலிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மட்டும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீது இரண்டு கொலைக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் Rori கர்ப்பமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Kandisஇன் உடல் இன்னும் சிக்காத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers