மகன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் நோயாளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது: 37 குற்றச்சாட்டுகள் பதிவு

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் ஒட்டாவாவில் தனது மகன் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் நோயாளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான 37 குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட நிரூபிக்கப்படாததால் அவர் தண்டிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒட்டாவாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தனது மகனை அனுமதித்திருந்த Danyiel Walker (41), அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 முதல் 24 வயது வரையுள்ள நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீது பாலியல் வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ரகசியமாக ஒருவரை நிர்வாணமாக ரசிப்பது மற்றும் வீடியோ எடுப்பது உட்பட 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Walker அந்த மருத்துவமனையில் ஒரு தன்னார்வலராக இல்லாத நிலையில் அவர் எப்படி மற்ற நோயாளிகளுடன் நெருங்கி பழக அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்விக்கு மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

முதலில் சிறார் ஆபாச புகைப்பட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் Walker ஆஜர் படுத்தப்பட்ட செய்தி வெளியானதும், அவரால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வந்து இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

Walkerஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Walkerஇன் மகன் தனது 11ஆவது வயதில் உயிரிழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள Walker, பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள 37 குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட நிரூபிக்கப்படாத நிலையில், அவர் தண்டிக்கப்படுவாரா இல்லை ஆதாரங்கள் இல்லை என விடுவிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்