வெறும் அலங்கார கல் என கருதிய கனேடியர்: வாயடைக்க வைத்த அதன் மதிப்பு

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் தெற்கு ஒன்ராறியோ பகுதியில் உலகின் மிகப் பெரிய முத்து ஒன்றை வெறும் அலங்கார கல் என கருதிய கனேடிய குடும்பம் ஒன்று தற்போது அதன் மதிப்பை அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளது.

தெற்கு ஒன்ராறியோவின் Mississauga பகுதியில் குடியிருந்து வருபவர் 34 வயதான ஆபிரகாம் ரீஸ். இவருக்கு இவரது உறவினர் குடும்ப சொத்து என ஒரு பெட்டியை பரிசாக அளித்துள்ளார்.

அந்த பெட்டியில் இருப்பது உலகின் மிகப் பெரிய இயற்கை முத்து என்பதை அறியாமல் கடந்த 59 ஆண்டுகளாக ஆபிரகாமின் அந்த உறவினர் பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த குடும்ப சொத்தானது தற்போது அந்த உறவினரால் ஆபிரகாமுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த கல்லை சந்தேகத்தின்பேரில் பரிசோதித்த ஆபிரகாமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அது உலகின் மிகப் பெரிய இயற்கை முத்து எனவும், சர்வதேச மதிப்பில் 90 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவலால் திக்குமுக்காடியுள்ள ஆபிரகாம், தற்போது தம்மிடம் இருக்கும் அரிய வகை முத்தை உலக மக்களுக்கு வெளிக்காட்ட முடிவு செய்துள்ளார்.

27.65 கி.கிராம் எடை கொண்ட இந்த முத்தானது, உலகில் தற்போதுள்ள இயற்கை முத்தில் மிகப் பெரியது என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

ஆபிரகாம் குடும்பத்தாரிடம் இந்த முத்தானது கடந்த 1959 ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. ஆபிரகாமின் தாத்தா தமது மகளுக்கு ஒருமுறை இதை பரிசாக அளித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு சென்றிருந்த அவர் அங்கிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இயற்கை முத்து உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்