துருக்கியில் சிறையிலடைக்கப்பட்ட கனேடிய இளஞ்ஜோடி: பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பின்னணி!

Report Print Balamanuvelan in கனடா
549Shares

துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனேடிய புதுமணத் தம்பதியினர், ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக துருக்கிக்கு சென்றார்களா என்ற கோணத்தில் கனேடிய பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

அதற்காக, துருக்கிக்கு விடுமுறைக்காக சென்ற இடத்தில் மாயமான புதுமணத் தம்பதியான Haleema Mustafa மற்றும் Ikar Maoவின் பின்னணியை அலசி வருகின்றனர் பொலிசார்.

தங்கள் 20 வயதுகளிலிருக்கும் Haleemaவும் Maoவும் 2018 டிசம்பரில்தான் திருமணம் செய்துகொண்டார்கள்.

தங்கள் குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, Haleemaவும் Maoவும் திடீரென மாயமானதாக அவர்களது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Mazlina Khan/Instagram

Maoவுக்கு ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்கு ஆசை இருந்திருக்கலாம் என்றும், அதனால் அவர் Haleemaவுடன் எல்லை தாண்டி சிரியாவுக்குள் சென்றிருக்கலாம் என்றும் Haleemaவின் குடும்பத்தார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், Haleemaவும் Maoவும் யூலை மாதத்திலிருந்து துருக்கியில் காவலில் இருக்கும் நிலையில், அவர்களுக்கெதிராக தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய துருக்கி அதிகாரிகள் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கனடாவைப் பொருத்தவரையில், கனேடிய பொலிசார் தங்கள் பங்குக்கு Haleema மற்றும் Maoவின் பின்னணியை விசாரித்து வருகின்றனர்.

18 வயது இருக்கும்போது Haleema, ஹிஜாப் குறித்து சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார், அது எனது தோற்றத்தில் ஒரு பாகம், நான் எனது நாணத்தையும் மதத்தையும் எப்படி ஒரு சேர வெளிப்படுத்துகிறேன் என்பதன் அடையாளமாக அது உள்ளது என்று கூறியிருந்தார் அவர்.

Tina Mackenzie/CBC

அத்துடன், ஒருபக்கம் தீவிர எண்ணம் கொண்ட ஆண்களைக் கொண்ட நாடுகள், பெண்களை ஹிஜாப் அணிய வற்புறுத்துகின்றன, மறுபக்கம் இந்த பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதிகள் பெண்களை உடையகற்ற கட்டாயப்படுத்துகிறார்கள், ஐ.எஸ் தங்கள் எதிரி என்று அவர்கள் எண்ணுகிறார்கள் ஆனால், அவர்களே அவர்களது எதிரிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் Haleema.

பிரான்ஸ் நாட்டில், கடற்கரையில் பர்தா அணிந்து நடமாடிய ஒரு பெண்ணை பொலிசார் தடுத்து நிறுத்திய செய்திகள் வெளியானபோது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதேபோல், Maoவும் துருக்கி நாட்டிலுள்ள Sanliurfa என்ற நகரில், தானும் தனது மனைவியும் வாழ இடம் தேடிக்கொண்டிருப்பதாக தான் கணக்கு வைத்திருக்கும் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.

Sanliurfa, சிரிய எல்லைக்கருகில் இருக்கும் ஒரு நகரம், ஆனால் அது ஒரு சுற்றுலாத்தலம் அல்ல.

வெளிநாட்டவர்கள் பலர் ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக அந்த எல்லை வழியாகத்தான் சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

எனவே இத்தனை விடயங்களும் தம்பதி மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருப்பதால், கனேடிய பொலிசாரும் Haleemaவுக்கும் Maoவுக்கும் தீவிரவாத தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ikar Mao/Couchsurfing.com

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்