கனடா தங்க சுரங்கத்தில் இருக்கும் இந்த பெண் யார்? 120 ஆண்டுகளுக்கு பின் வைரலாகும் உண்மை பின்னணி

Report Print Santhan in கனடா

எதிர்காலத்தை காப்பதற்காக 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த க்ரெட்டா தன்பெர்க் மீண்டும் பூமிக்கு டைம் டிராவல் மூலம் வந்துள்ளதாக இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

சர்வதேச அளவில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலகம் இணைய வேண்டும் என்று தனி ஒருவராக போராடி வருபவர் தான் 16 வயதான க்ரெட்டா தன்பெர்க், இவர் ஐநா சபையில் காலநிலை பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்களைக் கேள்வியால் அதற்றி சர்வதேச அளவில் இளைஞர்களுக்கான ரோல் மாடல் ஆக மாறியவர்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம் முழுவதும் பயணித்துப் பிரசாரம் மேற்கொண்டு வரும் இவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மட்டுமல்லாது உலகப் பெரும் தலைவர்களுக்கெல்லாம் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உதவுமாறு சவால் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் 120 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அந்த புகைப்படத்தில் 3 குழந்தைகளுடன் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் பார்ப்பதற்கு அப்படியே க்ரெட்டா தன்பெர்க் போன்றே உள்ளார்.

இதனால் க்ரெட்டா தன்பெர்க் டைம் டிராவல் மூலம் எதிர்காலத்தை காப்பாதற்காக இப்போது வந்துள்ளார் என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் குறித்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் இந்த புகைப்படம் குறித்து ஆராய்ந்தவர்கள், இது 1898-ம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்