ரொரன்ரோவில் பட்டப்பகலில் காரில் வந்தவரை கீழே தள்ளிவிட்ட மர்மநபர்கள்! பின்னர் செய்த செயல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காரில் உட்கார்ந்திருந்த நபரை துப்பாக்கி முனையில் மிரட்டி வெளியில் இழுத்து போட்டு அவரின் கார் மற்றும் செல்போன்களை நான்கு பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வடமேற்கு ரொரன்ரோவில் தான் இச்சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

56 வயதான நபர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது அங்கு வேகமாக வந்த இன்னொரு காரில் இருந்து மூன்று பேர் கீழே இறங்கினார்கள்.

காரின் ஓட்டுனர் இருக்கையில் நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

இதையடுத்து மூன்று பேரும் தாங்கள் தடுத்து நிறுத்திய காரில் இருந்த நபரை துப்பாக்கியை காட்டி கீழே இறக்கினார்கள்.

பின்னர் அவரின் செல்போன்களையும், கார் சாவியையும் பறித்து கொண்டு அவர் காரிலேயே மூவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

மூவரும் வந்த இன்னொரு காரை அதிலிருந்த நபர் ஓட்டி சென்றார்.

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்