கனடாவில் இரவு 11 மணிக்கு படுகாயத்துடன் கிடந்த இளம்பெண் உயிரிழப்பு! பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இரவு 11 மணிக்கு படுகாயத்துடன் கிடந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Edmonton நகர பொலிசாருக்கு Mount Lawn சாலையில் இளம்பெண்ணொருவர் உயிருக்கு போராடுவதாக நேற்று இரவு 11 மணியளவில் தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்ற போது பலத்த காயத்துடன் இளம் பெண் கிடந்தார்.

அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் சரியான வயதை பொலிசார் வெளியிடாத நிலையில் 18 அல்லது அதற்கு குறைவாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாருக்கேனும் ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்