கனடாவில் இளம் வயது ஆசிரியைக்கு புத்தாண்டு தொடங்கியவுடன் அடித்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் வந்த ஆனந்த கண்ணீர்

Report Print Raju Raju in கனடா
860Shares

கனடாவில் ஆசிரியை ஒருவருக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.

வான்கூவரில் ஆசிரியையாக பணிபுரிபவர் Rebecca MacKenzie.

இவருக்கு தான் 2021 புத்தாண்டு அமர்களமாக தொடங்கியுள்ளது. அதாவது லொட்டரியில் Rebecca MacKenzieக்கு பெரிய பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு BC/49 டிக்கெட்டில் $1 பரிசு விழுந்தது.

அதே போல 6/49 குலுக்கலில் $500,000 பரிசு கிடைத்துள்ளது.

எனக்கு தான் இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளதா என முதலில் நம்பமுடியவில்லை. மகிழ்ச்சியில் என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தேடுதலில் நான் இருந்தேன், இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்