கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறையாததால் மருத்துவமனைகள் திணறும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து நேற்று முன்தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு, மளிகை மற்றும் மருத்தகங்கள், மருத்துவமனை, உடற்பயிற்சி மற்றும் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது.
விதிகளை மீறுவோருக்கு ஆயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் மற்றும் ஓராண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.