முதியவர் தனியாக வாழ்ந்த வீட்டில் இரண்டு நாட்களாக திறக்கப்படாமலிருந்த ஜன்னல்கள்: தகவலறிந்து பதறிய பிள்ளைகள் கண்ட காட்சி

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் முதியவர் ஒருவர் தனியாக வாழ்ந்துவந்த நிலையில், இரண்டு நாட்களாக அவரது வீட்டின் ஜன்னல்கள் திறக்கப்படாமலிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தவர்கள் அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

பதறிப்போன ஜான் (84) என்ற அந்த முதியவரின் பிள்ளைகள் விழுந்தடித்துக்கொண்டு அவர் இருந்த வீட்டுக்குச் சென்றால், அங்கே ஜான் கட்டிலிருந்து தரையில் விழுந்து கிடந்திருக்கிறார்.

அவரது வாக்கர் ஒரு மூலையில் தலைகீழாக கிடந்திருக்கிறது. கை கால் முட்டிகளில் காயத்துடன் கிடந்திருக்கிறார் ஜான். அவரது மருத்து மாத்திரைகள் தொடப்படவேயில்லை.

அதாவது இரண்டு நாட்கள் அவர் கீழே விழுந்து கிடந்திருக்கிறார். இரண்டு நாட்களாக அவர் சாப்பிடவும் இல்லை, மாத்திரைகள் போட்டுக்கொள்ளவும் இல்லை.

Submitted by Stephen Slaunwhite

ஜான் இடுப்பெலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை டிஸ்சார்ஜ் செய்து வீடு ஒன்றில் தங்கவைத்துள்ளார்கள் அவரது பிள்ளைகள்.

ஜானை கவனித்துக்கொள்வதற்காக Closing the Gap என்ற நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலையும் மாலையும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து ஜானுக்கு உணவளித்துவிட்டு, அவருக்கான மருந்து மாத்திரிகளைக் கொடுக்கவேண்டும்.

Submitted by Stephen Slaunwhite

ஆனால், வெள்ளிக்கிழமைக்கு பிறகு யாரும் வந்து ஜானை கவனிக்கவில்லை. கோபத்தில் கொந்தளித்துள்ள பிள்ளைகள், Closing the Gap நிறுவனம் மன்னிப்பாவது கேட்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால், யாரும் மன்னிப்பு கேகவும் இல்லை. ஆகவே, ஜானுடைய பிள்ளைகள், Closing the Gap நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

ஆனால், நிறுவனம் சார்பில் வழக்காடுபவர், ஒரு தந்தையை கவனித்துக்கொள்வது வயது வந்த பிள்ளைகளின் கடமை இல்லையா என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்