கனடாவில் வீட்டுக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்த இளம் பெண் சடலமாக இருந்தது கண்டுபிடிப்பு! 26 வயது இளைஞன் கைது

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் வீட்டில் சடலமாக இளம்பெண் கிடந்த நிலையில் அது தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எட்மண்டனில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள வீட்டில் கெலிசி தண்டர் (23) என்ற இளம் பெண் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிசார் மற்றும் மருத்துவ உதவி குழுவினர் அங்கு சென்று கெலிசியை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

கெலிசி மரணத்தை மர்ம மரண வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வயட் என்ற 26 வயது இளைஞனை இது தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாறியுள்ளது.

உயிரிழந்த கெலிசிக்கும் வயட்டுக்கும் என்ன மாதிரியான உறவுமுறை இருந்தது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்