எதிரியுடன் கைகோர்க்க முனையும் ஊபெர் நிறுவனம்

Report Print Gokulan Gokulan in நிறுவனம்
296Shares
296Shares
lankasrimarket.com

தானியங்கி கார்களை வடிவமைத்து போக்குவரத்து பரிசோதனைகளை மேற்கொண்ட ஊபெர் நிறுவனம் தற்போது குறித்த முயற்சியினை இடைநிறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அரிசோனாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒன்றின்போது பெண் ஒருவருடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியிருந்தமையே இதற்கு காரணமாகும்.

எனினும் கிடப்பில் போடப்பட்டுள்ள இம் முயற்சிக்கு மீண்டும் உயிர்கொடுப்பதற்கு ஊபர் நிறுவனம் முயற்சித்து வருகின்றது.

இதற்காக Waymo நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளது.

ஆனாலும் Waymo நிறுவனம் ஊபர் நிறுவனத்திற்கு எதிராக 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடுத்திருந்தது.

இதன் காரணமாக ஊபர் நிறுவனத்தின் கோரிக்கைக்கு இதுவரை சாதகமான சமிக்கைஞகள் எதனையும் Waymo நிறுவனம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்