கொரோனோ வைரஸ் தொடர்பில் தனது நிறுவனப் பணியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சீனாவில் ஆரம்பித்து உலகின் பல பாகங்களுக்கும் பரவும் அபாயத்தை எட்டியுள்ளது கொரோனோ வைரஸ்.

சீனாவில் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நூற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இதனை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

இதன்படி அவசியமான காரணங்கள் எதுவும் இன்றி சீனாவுக்கு விஜயம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பணி நிமிர்த்தம் சீனாவுக்கு பயணம் செய்பவர்களையும் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வரைக்கும் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரேனோ வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்