Zoom நிறுவனத்தின் அடுத்த அதிரடி: அறிமுகமாகின்றது புதிய சட்டிங் சாதனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

மைக்ரோசொப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்களை விடவும் தற்போது முன்னணியில் திகழும் அப்பிளிக்கேஷனாக Zoom காணப்படுகின்றது.

இதில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் நிவர்த்திசெய்துகொண்டு தொடர்ந்தும் வீறுநடை போட்டுவருகின்றது.

இந்நிலையில் தற்போது Zoom வீடியோ தொடர்பாடல் வசதியை பெறுவதற்கு புதிய சாதனம் ஒன்றினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது முற்றிலும் வித்தியாசமான மென்பொருள் அனுபவத்தினை தரக்கூடிய ஒரு வன்பொருள் சாதனமாகும்.

DTEN என அழைக்கப்படும் இச் சாதனத்தின் பெறுமதியானது 599 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்