முன்னணி ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணினி சாதனங்கள் என்பவற்றினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வழங்கி வருகின்றது.
அதுமாத்திரமன்றி தானியங்கி முறையில் செயற்படும் கார்களை தயாரிக்கும் பணியிலும் ஏற்கணவே இறங்கியிருந்த ஆப்பிள் நிறுவனம் பின்னர் அதனை கைவிட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 2024 ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனம் கார் உற்பத்தியில் காலடி பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவைல ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதலவே வாகன உற்பத்தியில் காலடி பதிப்பதற்கான முயற்சிகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வந்ததாக ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் ஆப்பிள் நிறுவனத்தினால் கார் உற்பத்தி செய்யப்படுமாயின் அவையே உலகின் விலையுயர்ந்த கார்களாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.