சொந்த மண்ணில் இலங்கைக்கு வந்த சோகம்: தொடரை வென்று அதிர வைத்த இங்கிலாந்து

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று கொழும்பில் நடந்த 3வது ஒருநாள் போட்டி இவ்விரு அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 161 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணியில் நிபுனி ஹன்சிகா அதிகபட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில், லாரா மார்ஷ், ஹாசில், ஹார்டிலி ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் பியாவமவுண்ட் அதிரடியால் அந்த அணி 29.3 ஓவரிலே 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

டாமி பியாவமவுண்ட் 79 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என மொத்தம் 78 ஓட்டங்கள் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments