கைகொடுத்த ஜெயவர்த்தனே: டெய்லர் வானவேடிக்கையில் சென்ரல் அணி அபார வெற்றி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக் போட்டிகள் நியூசிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் - ஆக்லாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ஆக்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்ய, சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க முதலே விளாசி தள்ளிய அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்களை சேர்த்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் வானவேடிக்கை காட்டிய ரோஸ் டெய்லர் 41 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 82 ஓட்டங்கள் சேர்த்தார்.

தவிர, டானி கிளவர் 26 பந்தில் 47 ஓட்டங்களும், ஜெயவர்த்தனே 19 பந்தில் 31 ஓட்டங்களும், அணித்தலைவர் வில் எங் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் 214 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆக்லாந்து அணி திணற ஆரம்பித்தது.

அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க அந்த அணி 19.3 ஓவரில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் அணி 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சோல்யா 40 ஓட்டங்களையும், ஜெட் ரவல் 31 ஓட்டங்களையும் சேர்த்தனர்.

சென்ட்ரல் டிஸ்ட்டிக்ஸ் அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய டிக்னர் 5 விக்கெட்டுகளையும், ஜார்ஜ் வொர்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments