ஐபிஎல்-லில் புவனேஷ்வர் குமார் சாதனை

Report Print Meenakshi in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் புவனேஷ்வர் குமார்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியினை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத் அணி 3வது வெற்றியினை பெற்றுள்ளது.

நேற்று தொடங்கிய ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களை எடுத்தது.

இதில் புவனேஷ்வர் 19 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதன்மூலம் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார்.

பின்னர் விளையாடிய குங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 154 ஓட்டங்களை எடுத்து ’ஆல் அவுட்’ ஆனது.

19 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இதற்குமுன் மலிங்கா(147 விக்கெட்), அமித் மிஸ்ரா(129), பிராவோ(122), ஹர்பஜன் சிங்(122), ஆசிஷ் நெக்ரா(103), வினய் குமார்(101), அஸ்வின்(100) ஆகியோர்க்கு அடுத்ததாக புவனேஷ்வர் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments