டோனிக்கு மட்டும் முன்னுரிமை ஏன்? விரக்தியில் ஹர்பஜன் சிங்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

சாம்பியன்ஸ் கிண்ணம் தொடருக்கான இந்திய அணியில் தெரிவு செய்யப்படாதது குறித்து முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், சமீபகாலங்களில் டோனியின் பேட்டிங் ஃபார்ம் குறிப்பிடும்படியாக இல்லை.

அதேநேரம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அணி தேர்வில் டோனிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

போட்டி குறித்து நல்ல புரிதல் கொண்ட டோனி போன்ற அனுபவஸ்தர்கள் அணியில் இருப்பது சிறப்பானது தான். டோனியின் அனுபவம் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பது உண்மைதான்.

ஆனால், அதேபோல கடந்த 19 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் எனது அனுபவம் குறித்து அணித்தேர்வின்போது பரிசீலிக்காதது ஏன்? என்று ஹர்பஜன் கேட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments