இலங்கை அணிக்கு பின்னடைவு: சண்டிமல் இரண்டு போட்டிகளில் விளையாட தடை

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
596Shares
596Shares
lankasrimarket.com

வங்காள தேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணித்தலைவர் சண்டிமலுக்கு இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை - வங்காள தேச அணிகள் மோதின.

இரு அணிகளும் பவுண்டரிகள், சிக்சராக பறக்க விட்டதால் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். அடிக்கடி ஆலோசனை கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதனால் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்கள் குறைவாக வீசியது கண்டறியப்பட்டது.

ஐசிசி விதிமுறைப்படி நான்கு ஓவர்கள் என்பது அதிகப்படியான குற்றமாகும். இதனால் இலங்கை அணித் தலைவருக்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.

இரண்டு டிமெரிட் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 ஆகியவற்றில் பங்கேற்க முடியாது.

இதில் எது முதலில் வருகிறதோ, அப்போது இது நடைமுறை படுத்தப்படும். அதன்படி தற்போது டி20 தொடர் நடைபெற்று வருவதால் நாளை நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும்,

14-ந்திகதி வங்காள தேசத்திற்கு எதிராகவும் சண்டிமல் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற இலங்கை வீரர்களுக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்