ஐபிஎல் மைதானத்தில் வார்னர்: ஆச்சர்யத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது நடைபெறப் போகும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் சார்பாக இவரால் விளையாட முடியாத போதும் போட்டிகளைக் காணத் தான் இந்தியா வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பந்தை சேதப்படுத்தியதன் மூலம் தண்டனை தந்து கிரிக்கெட் உலகிலிருந்து தற்காலிகமாகத் தள்ளி வைத்திருப்பதால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்னர், சமீபத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் வீரரான புவனேஷ் தனது சமூகவலைதளத்தில் லைவ் ஆக வந்த போது ஹாய் புவி என்று கமென்ட் செய்துள்ளார்.

பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் சமூக வலைதளங்களில் இது போன்று பேசிக் கொள்வதில்லை, தனிமையில் உள்ளதாலேயே இவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

ஹைதராபாத் அணி சிறப்பான அணி என்றும் தான் இல்லாவிட்டாலும் அந்த அணி நன்றாக விளையாடும் என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடவே மைதானத்திற்குள்ளே இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாலும், பார்வையாளராக மைதானத்தில் சிறப்பு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து பார்க்கத் தடையில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகளில் ஒரு பார்வையாளராக இவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்