பஞ்சாப் போட்டியின் வெற்றிக்கு பின் என்ன நடந்தது? பிரித்தி ஜிந்தா உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பின் மைதானத்தில் இருந்த சிறுமிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே நான் அப்படி செயல்பட்டதாக பிரித்தி ஜிந்தா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் சென்னை அணிக்கெதிரான போட்டியின் போது பஞ்சாப் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டோனி களத்தில் இருந்த போதும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதால் அதன் உரிமையாளரான பிரித்தி ஜிந்தா அந்த வெற்றியை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்று பஞ்சாப் அணியின் ஜெர்சிகளை எடுத்து, ரசிகர்களுக்கு வினியோகித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று என்ன நடந்தது என்று தெரியவில்லை, பிரீத்தி உடனடியாக அங்கிருந்தவர்களை நோக்கி கோபமாக பேசியதுடன், அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று, அதன் பின் மீண்டும் வந்து ஜெர்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்தார்.

பிரித்தி ஜிந்தாவின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இரண்டு சிறுமிகள் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார்கள்.

அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், சற்று நகர்ந்து கொள்ளும்படி ரசிகர்களை நோக்கி கூறினேன்.

அந்த சிறுமிகள் சுவாசிக்க இடைவெளி அளிக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டேன் ஆனால் அதற்கு அவர்கள் ஒத்துழைக்காததன் காரணமாகவே அப்படி நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்