வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்தது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆசிய கிண்ணம் தொடரின் இறுதிப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்-இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 48.3 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் லிட்டன் தாஸ் சதம் அடித்து 121 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகரான பசீர் சாசா இந்திய அணியின் ஜெர்சி அணிந்து வந்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.