ஆசிய கிண்ண இறுதிப் போட்டி: இலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

Report Print Raju Raju in கிரிக்கெட்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வெற்றிக்கு 305 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. யாஷவி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்தது. 79 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் ராவத் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விளையாடிய ஜெய்ஸ்வால் 113 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 85 ரன்கள் சேர்த்தார்

பின்னர் வந்த வீரர்களும் பொறுப்பாக ஆடிய நிலையில் இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது

இதையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்குகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers