இந்த சொற்களை கேட்டால் வாந்திதான் வருகிறது: அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தை விளாசிய சுழற்பந்து ஜாம்பவான்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணி வீரர்களின் ஓய்வறைகளில் வைத்துள்ள வாசகங்கள் குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்காக வீரர்களின் ஓய்வறைகளில் புதிய வாசகங்கள் பதியப்பட்டன.

அந்த வாசகங்களில் ‘Make Australians Proud', 'Pressure', 'Patience’ மற்றும் ‘Elite Honesty' ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த வார்த்தைகளை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் வீரர் ஷேன் வார்னே, இது ‘சொற்கழிவு’ என வர்ணித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு வடிவத்திற்கும் சிறந்த கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர் வீரர்களை தன்னுடன் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். அனைத்து வார்த்தைகளையும் வெற்றுச் சொற்களையும் முதலில் மறந்துவிடுங்கள்.

சொற்கழிவுகளை விட்டு உதறுங்கள், மறந்துபோங்கள். இவையெல்லாம் குப்பைக் கூளமானவை, நமக்கு வாந்தி வரவழைப்பவை. நீங்கள் உங்கள் 200 பக்க ஆவணத்தை எழுதலாம், விளையாட்டு அறிவியலை வைத்துக் கொள்ளலாம்.

உயர் திறச் செயல்பாடு போன்ற முட்டாள்தனமானவற்றையெல்லாம் கொள்கைகள் என்று வைத்துக் கொள்வது படு கேவலமாக உள்ளது. இதில் பெரிய கவலை என்னவெனில், அவர்கள் தாங்கள் சரியாக செய்துகொண்டிருப்பதாக வேறு நினைக்கின்றனர். என்ன கொடுமை இது’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers