இந்திய வீரர்களே தொண்டையை பத்திரம பாத்துகோங்க..எச்சரிக்கும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களின் தொண்டையை குறி வைக்கலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கும் படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயன்சேப்பல் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலையில் உள்ளது.

டி20 தொடர் முடிந்த பின்பு இரு அணிகளுக்கிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் இந்திய வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், அவுஸ்திரேலியாவில் மற்ற அணிகள் விளையாட தடுமாறுவதே இங்கு பந்துகள் பவுண்சர்களாக எழும்புவதால் தான்.

அவுஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் அடக்கி வாசிக்கலாம். ஆனால் அவர்களின் செயல்பாடு எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் இருக்கும்.

சமீபகாலமாக அவுஸ்திரேலிய அணியின் பேட்டிங் அந்தளவிற்கு இல்லை என்றாலும் பவுலிங்கில் மிச்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பாட் கமின்ஸ் உள்ளிட்ட டாப் கிளாஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

அதிகமாக பவுண்ஸ் ஆனால் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், குறைவான பவுண்சர் பந்துகளை சமாளிப்பது இந்திய வீரர்களுக்கு மிக கடுமையாக அமையும், சரியாக தொண்டையை குறிவைத்து பந்து வீசும் அபாயம் இருக்கும். அதனால் பேட்டை கிடைமட்டமாக சுழற்றி ஆட வேண்டும். அதை தவறவிடும் பட்சத்தில் பேட்ஸ்மேன்கள் காயமடைய வாய்ப்புள்ளது.

அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவதால், அதை ஈடுகட்ட அவுஸ்திரேலிய பவுலர்கள் பவுன்சர்களால் ஓட்டங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள்.

அவுஸ்திரேலிய அணி வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதனால் இந்திய வீரர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்