அவுஸ்திரேலியாவை பழி தீர்த்துவிட்டோம்: அரையிறுதி பற்றி பேசிய கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணியை பழி தீர்த்துள்ளதாகவும், இப்போதே அரையிறுதியைப் பற்றி எதுவும் கூற முடியாது என்று இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணிகளில் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து அரையிறுதிக்கு நுழையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் அதே சமயம் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லியிடன், அரையிறுதி வாய்ப்பு குறித்து கேட்ட போது, இரண்டு போட்டிகள் தான் முடிந்துள்ளது.

6 போட்டிகளுக்குப் பிறகே, அரை இறுதிக்கான வாய்ப்பு குறித்து பேச முடியும், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா வலிமையுடன் இருப்பது சிறப்பான விஷயம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சொந்த மண்ணில் அந்த அணி தங்களை வீழ்த்தியதற்கு பழிதீர்த்து விட்டதாக கூறியுள்ளார்.

இந்தியா வந்த அவுஸ்திரேலியா அணி கடந்த மார்ச் மாதம் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers