வங்கதேச வீரர்களின் ஸ்டெம்புகளை தெறிக்க விட்ட பாகிஸ்தான் வீரர்... ஐசிசி வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி ஸ்டெம்புகளை தெறிக்கவிடும் வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்துடன் மோதியது.

இதில் பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி 35 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதில் வங்கதேச வீரர்களை அவர் தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் வெளியேற்றினர்.

இதன் வீடியோவை வெளியிட்டுள்ள ஐசிசி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இதே ஷாகின் அப்ரிடி தான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 15 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

தற்போது இந்த உலகக்கோப்பை போட்டியில் ஷாகின் அப்ரிடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 35 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers