டோனியின் ரன் அவுட் சர்ச்சைக்கு கிடைத்த தெளிவான பதில்... புகைப்படத்துடன் வெளியான ஆதாரம்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்காக டோனி 49-வது ஓவரில் போராடிக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆகினார்.

ஆனால் அந்த ரன் அவுட்டின் போது, பீல்டர்கள் 6 பேர் வெளியே இருந்ததாகவும், இதனால் அது நோ பாலாக இருந்திருந்தால், டோனி ஓடியிருக்கமாட்டார் எனவும் ரசிகர்கள் இணையத்தில் கூறி வந்தனர்.

அதுமட்டுமின்றி, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அது தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அந்த நேரத்தில் பீல்டர்களின் கிராபிக்ஸ் ஒளிபரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது போட்டியின் 49-வது ஓவரின் முதல் பந்தை பெர்கியுசன் வீசிய போது, அவுட் சைடு பீல்டிங் ஐந்து பேர் இருந்துள்ளனர். அந்த பந்தில் டோனி சிகஸ்ர் அடித்தார்.

அதன் பின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட போது, பால் டாட் பாலாக மாறியது.

இதைத் தொடர்ந்து மூன்றாவது பந்தை வீசும் போது, பீல்டிங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது திர்ட் மேன் திசையில் நின்ற பீல்டரை தூக்கி, ஷார்ட் தெர்ட் மீன் திசையில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதற்கு முன் இருந்த பீல்டிங் செட்டிங்கை வைத்து அந்த கிராபிக் பீல்டர் இது டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதை கமெண்ட்ரியில் பேசும் போது அவர்கள் தெளிவாக, திர்ட் மேன் திசையில் இருக்கும் பீல்டர், ஷார்ட் திர்ட் மென் திசைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறுவார்கள்.

இதனால் இது சரியான பந்து தான் என்பது தெரியவந்துள்ளது. டோனியின் ரன் அவுட் சர்ச்சைக்கும் முடிவு கிடைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers