டி20 வரலாற்றில் புதிய உலக சாதனை.. மாயாஜால சுழலில் 7 விக்கெட் சாய்த்த வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட் டி20 தொடரில் பர்மிங்காம் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பரிக்க சுழற் பந்துவீசசாளர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

வார்விக்ஷயர் கிரேஸ் சாலையில் நடந்ந டி20 போட்டியில் பர்மிங்காம்-லீஸ்செஸ்டெர்ஷைர் அணிகள் மோதின. இதில், லீஸ்செஸ்டெர்ஷைர் அணி வெற்றிப்பெற்றது.

லீஸ்செஸ்டெர்ஷைர் அணியில் விளையாடிய தென் ஆப்பரிக்க சுழற்பந்து வீச்சாளர் கொலின் அக்கர்மன், 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதுமட்டுமின்றி டி20 போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு கிளாமோர்கனுக்கு எதிராக சோமர்செட்டு மோதிய போட்டியில் மலேசிய பந்து வீச்சாளர் அருள் சுப்பையா 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது முந்தைய உலக சாதனையைாக இருந்தது. தற்போது, அருள் சப்பையாவின் சாதனையை கொலின் அக்கர்மன் முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்