41 பந்தில் சதம்..! 56 பந்தில் 14 சிக்ஸர்.. 127 ஓட்டங்கள்: டி-20 கிரிக்கெட்டில் பல சாதனைகள்: யார் அந்த முன்சி

Report Print Basu in கிரிக்கெட்

அயர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி-20 தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்தின் இடது கைது துடுப்பாட்டகாரரான ஜார்ஜ் முன்சி 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்காட்லாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. 253 ஓட்டங்கள் இலக்காக கொண்டு விளையாடிய நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் எடுத்து 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆனால், இந்த போட்டியில் சாதாரண போட்டியாக அமையவில்லை, பல சாதனைகள் படைக்கப்பட்ட போட்டியாக அமைந்துள்ளது.

253 ஓட்டங்கள் குவித்ததின் மூலம் டி-20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இணை நாடுகள் பட்டியலில் ஸ்காட்லாந்து அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இந்த பட்டியலில் 278 ஓட்டங்களுடன் செக் குடியரசு மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முதலிடத்தில் உள்ளன.

அதுமட்டுமின்றி சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது ஸ்காட்லாந்து. மேலும், 127 ஓட்டங்கள் குவித்த முன்சி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

அதே சமயம், 41 பந்துகளில் சதம் விளாசிய முன்சி, டி-20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரரானார்.

இந்த பட்டியலில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர், மற்றும் சுதேஷ் விக்ரமசாகேரா (செக் குடியரசு) என மூவரும் 35 பந்துகளில் சதம் அடித்த முதலிடத்தில் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல், டி-20 போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 127 ஓட்டங்கள் எடுத்தின் மூலம் அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இணை நாட்டு துடுப்பாட்காரர் என்ற பெருமையை பெற்றார் முன்சி.

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்சலாந்து அணிக்காக கோயிட்சர் மற்றும் முன்சி இருவரும் கூட்டணியாக 200 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில், 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவித்த கூட்டணி என்ற அடிப்படையில் ஸ்காட்லாந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ஜசாய்-கானி உள்ளனர், அவர்கள் 236 ஓட்டங்கள் கூட்டாணியாக குவித்துள்ளனர். அதன்பிறகு, அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் மற்றும் டார்சி ஷாட் ஆகியோர் 223 ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக 127 ஓட்டங்கள் குவித்த முன்சி, 5 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதன் மூலம் டி-20 சர்வதேச கிரிக்கெட்டில் 14 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரராக திகழ்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்