290 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி! அதிரடி காட்டும் தொடக்க வீரர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 290 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் அபாரமாக விளையாடி 115 ரன்கள் குவித்தார். பிராவோ 39 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 41 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் இசுரு உடனா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக அவிஸ்கா பெர்ணாண்டோவும், அணித்தலைவர் திமுத் கருணரத்னேவும் களமிறங்கியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்