முன்னாள் கேப்டன் குமாரா சங்ககாராவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை: அலுவலகத்திற்கு முன் ஆதரவாளர்கள் போராட்டம்

Report Print Kavitha in கிரிக்கெட்

2011-இல் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானதா அலுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள இலங்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் முன், இலங்கை அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா, தொடக்க ஆட்டக்காரராக இருந்த உபுல் தரங்கா ஆகியோர் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் கேட்பன் சங்ககாராவும் ஆஜராகியுள்ளார். அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்ற குமார் சங்ககாராவை இலங்கை அரசு மற்றும் காவல்துறை அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு இளைஞர் அமைப்பு விசாரணை அலுவலத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டது.

அதில் ஆதாரமற்ற மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குமார் சங்கக்கரா மற்றும் பிற கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து துன்புறுத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதாக கூட்டணி தெரிவித்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்