சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற டோனி ஐபிஎல்-லில் சி.எஸ்.கே அணிக்கு எத்தனை காலம் விளையாடுவார்? வெளியான தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்
483Shares

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி விரும்பும் வரை விளையாடலாம் எனஎன்.சீனிவாசன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் மோசமான தோல்வி காரணமாக அடுத்து வந்த தொடரில் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க தேர்வாளர் ஒருவர் முயற்சி செய்ததாகவும் அதனை தான் தடுத்தி நிறுத்தியதாகவும் அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நமது அணி சிறப்பாக விளையாடவில்லை. எனவே தேர்வாளர் ஒருவர் டோனியை ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பினார். டோனியை எப்படி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நமது அணி அவரது தலைமையில் உலக கோப்பையை வென்று இருந்தது.

டோனிக்கு பதிலாக யாரை கேப்டனாக தேர்வு செய்வது என்பது குறித்து கூட தேர்வு குழுவினர் சிந்திக்கவில்லை. இது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்வு குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக டோனியை அணியில் ஒரு வீரராக மட்டும் தேர்வு செய்ய வழியில்லை என்று நான் தெரிவித்தேன்.

தேர்வு குழு கூட்டத்தில் டோனியை கேப்டனாக தேர்வு செய்ய தேர்வாளர்கள் மறுக்கிறார்கள் என்று வாரியத்தின் செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தலே எனக்கு தகவல் தெரிவித்தார். அணியில் ஒரு வீரராக தேர்வு செய்ய மட்டுமே சம்மதிப்பதாக கூறினார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி டோனி கேப்டனாக இருப்பார் என்று முடிவெடுக்க வைத்தேன்.

டோனி விரும்புகிற காலம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்