அவர் மாதிரியான ஒரு வீரர் கோஹ்லிக்கு தேவை: மைக்கேல் ஹோல்டிங்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
214Shares

இந்திய அணி வெற்றி பெற டோனி போன்ற ஒரு வீரர் தேவை என முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான மைக்கேல் ஹோல்டிங், அந்த ஆட்டம் தொடர்பில் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள். ஆனால் டோனி இல்லாமல் கோஹ்லியின் அணி தடுமாறும் என எனக்குத் தெரியும்.

இன்னிங்ஸின் நடுவில் களமிறங்கும் டோனி இலக்கை விரட்டும்போது ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

டோனி அணியில் இருக்கும்போது மிகச்சிறப்பாக இலக்குகளை இந்திய அணி விரட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று எதிரணியை முதலில் துடுப்பாடச் செய்யச் சொல்வதற்கு இந்திய அணி அஞ்சியதே இல்லை.

ஏனெனில் டோனியால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். தற்போது இந்திய அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள் உள்ளார்கள்.

இருப்பினும் டோனி போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்குத் தேவை. டோனியின் ஆட்டத்திறனை மட்டும் கொண்டிராமல் அவருடைய மனவலிமையும் அந்த வீரருக்கு இருக்கவேண்டும் என்றார்.

You May Like This

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்