ஆண்களை விடவும் முன்நிலையில் திகழும் பெண்கள்: எதில் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கல்வி

4 ஆம் வகுப்பு முதல் ஆண்களை விட பெண்கள் வாசிப்பு மற்றும் எமுத்தறிவாற்றலில் சிறந்து விளங்குவதாகவும், அவர்களின் வயது அதிகரிக்கையில் இவ் ஆற்றல் மேலும் அதிகரிப்பதாகவும் ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கென 4, 8 மற்றும் 12 ஆம் வகுப்புக்களைச் சேர்ந்த 3.9 மில்லியன் மாணவர்கள் பெற்ற புள்ளிகள் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போதே 4 ஆம் வகுப்பில் பெண்கள் எழுத்து வாசிப்பில் ஆண்களை விட முன்னிலை பெறுவது அறியப்பட்டுள்ளது.

மாணவர்கள் 8 மற்றும் 12 ஆம் வகுப்பை அடைகையில் பெண்களின் ஆற்றல் மேலும் அதிகரிப்பதாகவும், அதிலும் வாசிப்பை விட எழுத்தாற்றலில் இவ் அதிகரிப்பு பன்மடங்காக காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, எழுத்து வாசிப்பின் போது ஆண்கள் மூளையின் அரைக் கோளத்தின் ஒருபகுதியை மட்டுமே உபயோகிப்பதாகவும், பெண்கள் இரு அரைக் கோளங்களையும் உபயோகிப்பதாகவும் ஆய்வாளர் முன்வைக்கிறார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்