எங்களுக்கு சண்டை போட தெரியாது! இந்த சிறிய உதவியை செய்யக்கூடாதா? எஸ்பிபி முன்னர் இப்படி உருக்கமாக பேச காரணம் என்ன?

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
7430Shares

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சில வருடங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின் போது பேசிய விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளது

சில வருடங்களுக்கு முன்னர் பாடகர்கள் சேர்ந்து இந்திய பாடகர்கள் உரிமை சங்கத்தை துவங்கினார்கள். அப்போது இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அதில் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏசுதாஸ், ஹரிஹரண், பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் இளம்தலைமுறை பாடகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இந்திய அரசின் சட்டப்படி பாடகர்களுக்கான ராயல்டியை பெற்றுக் கொடுக்குமாறு இந்த சங்கம் கோரிக்கை விடுக்கிறது. டிவி, ரேடியோ, இணையதளம், செல்போன் ரிங்டோன் என்று எந்த வகையில் பாடல்களை ஒலிப்பினால் ராயல்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், நாங்கள் மக்களின் மகிழ்ச்சி, கவலைக்காக மட்டும் அல்லாது எங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பாடுகிறோம்.

உங்கள் சந்தோஷம், துக்கத்தில் எங்கள் பாடல்கள் ஒலிக்கிறது. அப்படி இருக்கையில் எங்களுக்காக நீங்கள் இந்த சிறிய உதவியை செய்யக்கூடாதா? எங்களுக்கு சண்டை போட தெரியாது. சண்டை போடுவது போல் பாடத் தான் தெரியும். அதனால் இதை எங்களின் பணிவான வேண்டுகோளாக முன் வைக்கிறோம் என பேசினார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்