முக்கிய அரசியல் பிரபலத்தை சீண்டும் நடிகர் விஜய் சேதுபதி? வெளியான புதிய படத்தின் புகைப்படத்தால் எழுந்துள்ள சர்ச்சை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1068Shares

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீசர் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியும், பார்த்திபனும் இணைந்து நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார்.

முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் பார்த்திபனுக்கு ராசிமான் என பெயரிடப்பட்டிருப்பதும் அவரது கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் தெரிய வருகிறது. அவரது கட்சிக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு என்பதே பிரதான வண்ணமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

டீசரின் இறுதிக்காட்சியில் எப்டினாலும் நீங்க என்னை சும்மா விடப்போறதில்ல. அதனால நானும் உங்கள சும்மா விடுறதா இல்ல. வாங்களேன். நேரடியாவே மோதிப் பாப்போம் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்