முக்கிய ஐரோப்பிய நாடுகளில் பதுக்கி வைப்பு... அம்பலமான மாபெரும் சதித்திட்டம்: பயங்கரவாத குழுவுக்கு தொடர்பு

Report Print Arbin Arbin in ஐரோப்பா

பெய்ரூட்டை மொத்தமாக சிதைத்த ரசாயனம் உட்பட, ஆயுதங்களை ஐரோப்பா முழுவதும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு பதுக்கி வைத்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நேற்று இரவு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ல் இருந்தே பெல்ஜியம், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஹெஸ்பொல்லா அமைப்பானது அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ரகசியமாக பதுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் எதிர்கால ஆபத்தை கருத்தில் கொண்டு ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பை ஐரோப்பிய நாடுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

பொதுவாக, ஹெஸ்பொல்லா அமைப்பானது முதலுதவி மருத்துவ சாதனங்கள் என்ற போர்வையில் அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை கடத்தியதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த ரசாயனமானது ஹெஸ்பொல்லா அமைப்பால், பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்து போன்ற ஒரு சம்பவத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனால் இந்த அமைப்பை தடை செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் வியாழக்கிழமை இரவு ஐரோப்பாவிடம் முறையிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஹெஸ்பொல்லா ஏன் அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை பதுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள அமெரிக்க நிர்வாகம்,

கண்டிப்பாக ஐரோப்பியாவில் தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்கும் திட்டம் காரணமாகவே இருக்கும் எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கியமான ஐரோப்பிய நாடுகளில் குறித்த ரசாயனத்தை ஹெஸ்பொல்லா பதுக்கி இருந்தாலும், கிரீஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இன்னமும் பதுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்