சத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

சோற்றுக்கற்றாழையில் பல மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது

அதுமட்டுமின்றி சோற்றுக்கற்றாழையில் அடங்கியிருக்கும் சத்துக்கள் சோற்றுக் கற்றாழையில் நீர்ச்சத்து 98.5% மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் 0.3% அடங்கியுள்ளது.

மேலும் அதில் Pectin, Amino acids, Lipids, Sterols, Tannins, Enzymes ஆகிய சத்துக்களும், முக்கிய சர்க்கரை சத்தான Mannose 6 phosphate-ம் சோற்றுக்கற்றாழையில் உள்ளது.

இதில் தயாரிக்கப்படும் ஜூஸ் உடலிலுள்ள பல நோய்களுக்கு தீர்வு தருகின்றது.

அந்தவகையில் இவ்வளவு சத்து நிறைந்த சோற்றுக்கற்றாழை ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • சோற்றுக்கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
  • தேன் - 1 ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை

சோற்றுக்கற்றாழை தோலை முழுவதுமாக நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஜெல்லை மிக்சியில் போட்ட அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிடவும். சூப்பரான சோற்றுக்கற்றாழை ஜூஸ் ரெடி.

ஆரோக்கிய நன்மைகள்
  • சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது நல்லது. கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
  • நரம்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.
  • இந்த ஜூஸை தொடர்ந்து பத்து நாட்கள் பருகிவிட்டு பின்னர் 10 நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 10 நாட்கள் தொடர்ந்து பருகலாம்.

குறிப்பு: இதை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சாப்பிடக்கூடாது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers