வீட்டு உரிமையாளருக்கு துரோகம் செய்த வாடகைதாரருக்கு 8 லட்ச ரூபாய் அபராதம்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
வீட்டு உரிமையாளருக்கு துரோகம் செய்த வாடகைதாரருக்கு 8 லட்ச ரூபாய் அபராதம்
90Shares
90Shares
ibctamil.com

பிரான்ஸ் நாட்டில் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு குடியிருந்த வீட்டை மற்றொரு நபருக்கு வாடகைக்கு விட்ட நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் Airbnb என்ற இணையத்தளம் மூலம் வீடுகளை தெரிவு செய்து வாடகைக்கு தங்கலாம்.

இந்த இணையத்தளம் மூலம் வீட்டு உரிமையாளருக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டு வாடகைதாரர்கள் வீடுகளில் தங்கி வரலாம்.

இந்நிலையில், பாரீஸில் உள்ள 5-வது வட்டத்தில் நபர் ஒருவர் வாடகைக்கு வீட்டில் குடியிருந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் வாடகை இருந்த வீட்டின் ஒரு பகுதியை உரிமையாளருக்கு தெரியாமல் இந்த நபர் மற்றொரு நபருக்கு வாடகைக்கு அனுமதித்துள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு அனுமதிக்க வேண்டுமானால் உரிமையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இந்த நபர் அனுமதி எதுவும் பெறாமல் மாதம் 5,000 யூரோ (8,17,916 இலங்கை ரூபாய்) வாடகையாக பெற்று வந்துள்ளார்.

இந்த விவகாரம் வீட்டு உரிமையாளருக்கு தெரியவந்ததும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

‘உரிமையாளருக்கு தெரியாமல் அவருடைய வீட்டை வாடகைதாரர் மற்றொரு நபருக்கு வாடகைக்கு விட்டது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, வீட்டு உரிமையாளருக்கு வாடகைதாரர் 5,000 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments