பூங்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் ஆசிரியை: நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரான்ஸ்
381Shares
381Shares
lankasrimarket.com

பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் பிரான்ஸில் உள்ள பூங்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் உள்ள முதன்மை பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் Eimear Noonan (20), இவர் அயர்லாந்தை சேர்ந்தவராவார்.

கடந்த புதன்கிழமை பிரான்ஸின் Annonay பகுதிக்கு சென்ற Eimear அதன் பின்னர் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள ஒரு பூங்காவில் Eimear நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை இந்த வாரத்தில் செய்யப்படவுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்தால் ஏற்பட்ட மரணம் என இதை கருதுகிறோம், பூங்காவில் உள்ள சிறிய நீரோடையில் Eimear தடுக்கி விழுந்துள்ளார்.

அதில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், மயங்கி விழுந்த காரணத்தால் நீரில் Eimear மூழ்கியுள்ளதாக கூறியுள்ளனர்.

Eimear-ன் சகோதரர் மைக்கேல் கூறுகையில், கடைசியாக Annonay பகுதியில் அவர் ஷாப்பிங் செய்தார்.

அதன் பின்னர் காணவில்லை, நண்பர்களிடமோ, சமூகவலைதளத்திலோ எந்த தகவலையும் Eimear தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்