விற்பனைக்கு வந்துள்ள மன்னரின் அரண்மனை: விலை என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
358Shares
358Shares
ibctamil.com

பிரான்சில் Richard the Lionheart என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேய மன்னரின் அரண்மனை விற்பனைக்கு வந்துள்ளது.

Richard the Lion Heart என்று அழைக்கப்பட்ட மன்னர் முதலாம் ரிச்சர்ட், இவர் கொல்லப்பட்ட புகழ்பெற்ற அரண்மனை பிரான்சின் Limousin என்ற பகுதியில் உள்ளது.

இதே கோட்டையில் நிற்கும்போது வீரர் ஒருவர் விட்ட அம்பு இடது தோள்பட்டையில் ஏற்படுத்திய காயம் காரணமாக அவர் இறந்தார்.

இந்தக் கோட்டை இப்போது 1 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தக் கோட்டையில் 15 அறைகளும், ஒரு பாதாளச்சிறையும் உள்ளன, பிரான்சு நாட்டைச் சேர்ந்த இருவர் இதை வாங்க முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Chalus பகுதியின் மேயராகிய Alain Brezaudy, பாரம்பரியம் மிக்க இந்த அரண்மனையை வாங்கப்போவது யாராக இருந்தாலும் அதை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு கோரிக்கை வைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்